தமிழ் மொழியில் எங்கள் பயணக் கதைகள்


தாய் மொழியில் கதை சொல்லுவது மற்றும் கேட்பது எப்பொழுதுமே சுவைதான். நாங்கள் இந்த தொகுப்பை செய்யும் பொழுது திடீரென ஒரு யோசனை, தமிழில் செய்தால் நன்றாக இருக்குமே என்று ! சரி செய்வோம் என்று முடிவெடுத்தோம். வித்தியாசமான அனுபவம் இது, ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் வேலை சம்பந்தமாக ஆங்கிலம் மட்டுமே உபயோகித்து வந்தவர்கள் நாங்கள். வெளிப்படையாக சொன்னால் தமிழில் எழுதுவது நன்றாகத் தான் உள்ளது !

இந்த மாதிரி நேரங்களில் தான் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்  எவ்வளவு அதிகம் என்று தெரிகிறது. தமிழில் டைப்பிங் செய்ய எங்களுக்குத் தெரியாது. ஆன்லைன் மூலமாக உள்ளீடு செய்ய கூகிள் மட்டுமே உதவியது. யோசித்து பார்த்தால் ஏன் இந்த சேவை தமிழக அரசோ அல்லது “தமிழ் தமிழ்” என்று சொல்லும் எந்த அரசியல் அமைப்போ செய்யவில்லை ? தமிழ் வளர்ப்பது இவர்களது கடமை இல்லையா? கணினி இல்லாமல் வாழ முடியாத இந்த காலத்தில் தமிழ் புத்தகத்தில் மட்டும் இருந்தால் எப்படி வாழும் ? பொது மக்களா இதை செய்ய வேண்டும் ? ஆயிரம் கோடி செலவில் ரோடு போடும் போது ஒரு சில கோடிகள் தமிழை கணினி மற்றும் இணையத்திற்கு ஏற்றதாக கொண்டு செல்வதற்கு செலவிட வேண்டாமா ?

இதை நாங்கள் தமிழ் மொழிக்கு மட்டும் சொல்லவில்லை .

இணையம் முழுவதும் ஆங்கிலம் விரிந்து கிடக்கிறது . மற்ற மொழிகளும் இணையத்திற்கு ஏற்ப மாற வேண்டாமா ?

எங்கள் தாய் மொழி தமிழ் என்பதாலும், ஆங்கிலத்தில் தான் பிற மாநிலத்தாரால் படிக்க முடியுமென்பதால்  இந்த தொகுப்பை இரண்டு மொழிகளிலும் செய்திருக்கிறோம்.


பூக்களின் பள்ளத்தாக்கு

குறிஞ்சி மலர்களை தேடி ஒரு பயணம்

வசந்த கால மலர்களை தேடி ஒரு பயணம்