தமிழ் மொழியில் எங்கள் பயணக் கதைகள்


தாய் மொழியில் கதை சொல்லுவது மற்றும் கேட்பது எப்பொழுதுமே சுவைதான். நாங்கள் இந்த தொகுப்பை செய்யும் பொழுது திடீரென ஒரு யோசனை, தமிழில் செய்தால் நன்றாக இருக்குமே என்று ! சரி செய்வோம் என்று முடிவெடுத்தோம். வித்தியாசமான அனுபவம் இது, ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் வேலை சம்பந்தமாக ஆங்கிலம் மட்டுமே உபயோகித்து வந்தவர்கள் நாங்கள். வெளிப்படையாக சொன்னால் தமிழில் எழுதுவது நன்றாகத் தான் உள்ளது !

இந்த மாதிரி நேரங்களில் தான் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்  எவ்வளவு அதிகம் என்று தெரிகிறது. தமிழில் டைப்பிங் செய்ய எங்களுக்குத் தெரியாது. ஆன்லைன் மூலமாக உள்ளீடு செய்ய கூகிள் மட்டுமே உதவியது. யோசித்து பார்த்தால் ஏன் இந்த சேவை தமிழக அரசோ அல்லது “தமிழ் தமிழ்” என்று சொல்லும் எந்த அரசியல் அமைப்போ செய்யவில்லை ? தமிழ் வளர்ப்பது இவர்களது கடமை இல்லையா? கணினி இல்லாமல் வாழ முடியாத இந்த காலத்தில் தமிழ் புத்தகத்தில் மட்டும் இருந்தால் எப்படி வாழும் ? பொது மக்களா இதை செய்ய வேண்டும் ? ஆயிரம் கோடி செலவில் ரோடு போடும் போது ஒரு சில கோடிகள் தமிழை கணினி மற்றும் இணையத்திற்கு ஏற்றதாக கொண்டு செல்வதற்கு செலவிட வேண்டாமா ?

இதை நாங்கள் தமிழ் மொழிக்கு மட்டும் சொல்லவில்லை .

இணையம் முழுவதும் ஆங்கிலம் விரிந்து கிடக்கிறது . மற்ற மொழிகளும் இணையத்திற்கு ஏற்ப மாற வேண்டாமா ?

எங்கள் தாய் மொழி தமிழ் என்பதாலும், ஆங்கிலத்தில் தான் பிற மாநிலத்தாரால் படிக்க முடியுமென்பதால்  இந்த தொகுப்பை இரண்டு மொழிகளிலும் செய்திருக்கிறோம்.

Belenois aurota - Pioneer butterfly -chinnar wildlife sanctuary

சின்னாறு வன சரணாலயம்

சின்னாறு வன சரணாலயம் சின்னாறு வன சரணாலயம் (chinnar wildlife sanctuary) முன்னாறு அருகில் இருந்தாலும்,சின்னாறு வனம் இருக்குமிடம் மழை மறைவு பிரதேசம். 90 ஸ்ஃ.கிமீ பரப்பளவிலுள்ள ...
Read More
mudskipper-point-calimere

கோடியக்கரை வன சரணாலயம் – Point Calimere

கோடியக்கரை வன சரணாலயம் (Point Calimere) கோடியக்கரை வன சரணாலயம் (Point Calimere) சென்னையிலிருந்து 360 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் நான்கு வழி சாலைகள் இல்லாததால் ...
Read More
Neelakurinji (Strobilanthes kunthianus) - mathi

குறிஞ்சி ( kurunji ) மலர்களை தேடி ஒரு பயணம்

குறிஞ்சி ( kurunji ) மலர்களை தேடி ஒரு பயணம் சில மலர்கள் தினமும் மலரும், சில மலர்கள் இரவில் மட்டுமே மலரும், சில மலர்கள் வெப்பநிலைக்கேற்ப ...
Read More
North-manitou-mathi-trekking-forest

நார்த் மானிட்டோ ( north manitou ) தீவு

நார்த் மானிட்டோ (North manitou ) தீவு சில இடங்களை கதைகளில் மட்டுமே படித்து கற்பனை செய்திருப்போம். அந்த மாதிரி இடங்கள் உலகத்தில் இருக்க வாய்ப்பு மிகவும் ...
Read More
Ruddy shelduck

கியோலாடியோ தேசிய பூங்கா

கியோலாடியோ தேசிய பூங்கா-ராஜஸ்தான் கியோலாடியோ தேசிய பூங்கா மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஈரநிலம். இந்த பூங்கா இயற்கையாக உருவானது அல்ல என்றாலும் 230 பறவை இனங்களும், பல்வேறு உயிரினங்களும் ...
Read More
Brahma Kamal Saussera Flower

கங்காரியா & ஹேம்குண்ட் மலையேற்றம்

கங்காரியா & ஹேம்குண்ட் மலையேற்றம் உத்திரகாண்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கு நந்தாதேவி தேசிய பூங்காவில் உள்ளது. விதவிதமான வண்ண மலர்களை காண்பதற்கு இந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான ...
Read More
Elephants playing

இலங்கை (Srilanka) – மழை மழை மழை பயணம்

இலங்கை (Srilanka) - மழை மழை மழை பயணம் எங்களுக்கு மழை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த பயணத்தில் நாங்களே மழை கொஞ்சம் நிற்காதா என்று யோசிக்கிற ...
Read More
Karimala Trekking

கரிமலை மலையேற்றம் (Parambikulam)

கரிமலை மலையேற்றம் (Parambikulam) வினோத்துக்கும் எனக்கும் காடுகள்,வனவிலங்குகள் பிடிக்குமென்பதால் திருமணமானதிலிருந்து பல முறை சென்ற இடம் பரம்பிக்குளம் (Parambikulam) புலிகள் காப்பகம். தீவு வீடு ,மரவீடு,டென்ட் என்று ...
Read More
ஏலகிரி

ஏலகிரி குன்று (Yelagiri Hills) பயணம்

ஏலகிரி குன்று (Yelagiri Hills) ஏலகிரி (Yelagiri) 3643 அடியில் இருப்பதால் சென்னையை விட வெப்ப நிலை கொஞ்சம் குறைவாக இருக்கும். சென்னையில் இருந்து 4 மணி ...
Read More
Rameswaram

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பழங்கதைகளில் இலங்கையையும் தமிழ்நாடையும் இணைக்கும் இடமாக ராமேஸ்வரம் இருந்தது.இந்து புராணங்களில் இந்த இடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது, முக்கியமாக ராமாயணம். இந்த ஊர் இந்து யாத்திரையில் ...
Read More
Valley of flowers meadow

பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers )

பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers ) பூக்களின் பள்ளத்தாக்கு ( Valley of Flowers ) உத்திரகாண்டில் உள்ள நந்தாதேவி மலைத்தொடர்ச்சியின் ஒரு பகுதி ...
Read More
road to kaas

காஸ் – சொர்க்கத்தில் தொலைந்து போன பயணம்

காஸ் - சொர்க்கத்தில் தொலைந்து போன பயணம் காஸ் பீடபூமி 1200 சதுர மீட்டர் உயரத்தில் சதாரா அருகே அமைந்துள்ளது. மலை மலையாக வண்ணமிக்க மலர்களை பார்ப்பதற்கு ...
Read More
Echinocereus triglochidiatus claret cup cactus

பிக் பென்ட் தேசிய பூங்கா

பிக் பென்ட் தேசிய பூங்கா பிக் பென்ட் தேசிய பூங்கா அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது. நாங்கள் வசித்த இடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது இந்த பூங்கா ...
Read More
Meenmutty falls

மழையில் மீன்முட்டி அருவி

மழையில் மீன்முட்டி அருவி (Meenmutty Waterfalls) வீட்டிலே வருடம் முழுவதும் இருப்பவர்களுக்கு வருடத்தில் ஒரு முறை சுற்றுலா செல்வது என்றால் மிகவும் புதிய அனுபவமாக இருக்கும்.வருடத்தில் பாதி ...
Read More
neer maruthu -Terminalia arjuna

ஆடி பெருக்கு .. பொங்கும் காவேரி

ஆடி பெருக்கு .. பொங்கும் காவேரி https://youtu.be/w37kBHpnR-k தமிழகத்தில் இந்த வருடத்தில் ஒரே மோசமான நிகழ்வுகள். நிறைய போராட்டங்கள், நிறைய குரங்கணி போல விபத்துக்கள், கற்பழிப்பு போன்ற ...
Read More