தமிழ் மொழியில் எங்கள் பயணக் கதைகள்
தாய் மொழியில் கதை சொல்லுவது மற்றும் கேட்பது எப்பொழுதுமே சுவைதான். நாங்கள் இந்த தொகுப்பை செய்யும் பொழுது திடீரென ஒரு யோசனை, தமிழில் செய்தால் நன்றாக இருக்குமே என்று ! சரி செய்வோம் என்று முடிவெடுத்தோம். வித்தியாசமான அனுபவம் இது, ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் வேலை சம்பந்தமாக ஆங்கிலம் மட்டுமே உபயோகித்து வந்தவர்கள் நாங்கள். வெளிப்படையாக சொன்னால் தமிழில் எழுதுவது நன்றாகத் தான் உள்ளது !
இந்த மாதிரி நேரங்களில் தான் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் எவ்வளவு அதிகம் என்று தெரிகிறது. தமிழில் டைப்பிங் செய்ய எங்களுக்குத் தெரியாது. ஆன்லைன் மூலமாக உள்ளீடு செய்ய கூகிள் மட்டுமே உதவியது. யோசித்து பார்த்தால் ஏன் இந்த சேவை தமிழக அரசோ அல்லது “தமிழ் தமிழ்” என்று சொல்லும் எந்த அரசியல் அமைப்போ செய்யவில்லை ? தமிழ் வளர்ப்பது இவர்களது கடமை இல்லையா? கணினி இல்லாமல் வாழ முடியாத இந்த காலத்தில் தமிழ் புத்தகத்தில் மட்டும் இருந்தால் எப்படி வாழும் ? பொது மக்களா இதை செய்ய வேண்டும் ? ஆயிரம் கோடி செலவில் ரோடு போடும் போது ஒரு சில கோடிகள் தமிழை கணினி மற்றும் இணையத்திற்கு ஏற்றதாக கொண்டு செல்வதற்கு செலவிட வேண்டாமா ?
இதை நாங்கள் தமிழ் மொழிக்கு மட்டும் சொல்லவில்லை .
இணையம் முழுவதும் ஆங்கிலம் விரிந்து கிடக்கிறது . மற்ற மொழிகளும் இணையத்திற்கு ஏற்ப மாற வேண்டாமா ?
எங்கள் தாய் மொழி தமிழ் என்பதாலும், ஆங்கிலத்தில் தான் பிற மாநிலத்தாரால் படிக்க முடியுமென்பதால் இந்த தொகுப்பை இரண்டு மொழிகளிலும் செய்திருக்கிறோம்.
காட்டுக்குள் இருக்கும் பழமையான அத்திரி கோவில். நாங்கள் பலமுறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு சென்றிருந்தாலும் மிகவும் பெரிய இடம் என்பதால் ஒவ்வொரு முறை ஒவ்வொரு சரகத்திற்கு ...
Read Moreகாட்டில் முகாமிடுதல் ஒரு தனி அனுபவம். இரவு நேரம் காட்டை காட்டினுள் இருந்து பார்ப்பது சிலிர்ப்பூட்டுவதாக இருக்கும். நானும் வினோத்தும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ...
Read Moreவினோத்தும் நானும் கன்னியாகுமரி நேச்சர் பௌன்டேஷன் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாக வெளியூர் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அதை பற்றி கவலைபடாத அளவுக்குஎங்களுக்கு கன்னியாகுமரியில் உள்ள காடுகளை சுற்ற ...
Read Moreஆரல்வாய்மொழி மலையேற்றம் தமிழ்நாட்டில் நிறைய சிறிய மலைகள் இருந்தாலும் பெரும்பாலான மலைகள் காப்புக்காடுகளுக்கு உள்ளே வருவதால் வனத்துறை அனுமதி இல்லாமல் மலையேற முடியாது. அதே சமயம் தமிழ்நாட்டில் ...
Read Moreகொடைக்கானல் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அழகிய மலைதொடர்கள் , ஸ்வெட்டர் போட்டுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு ஒரு குளிர், ஆங்காங்கே விற்கப்படுகின்ற சூடான பஜ்ஜி,சோளங்கள் மற்றும் பல ...
Read Moreதமிழ் நாட்டின் தாவரங்களின் தமிழ் பெயர்கள் Tamil names of plants and trees found in Tamil Nadu - தாவரங்களின் தமிழ் பெயர்கள் தமிழ் ...
Read Moreவால்பாறை பயணம் பூக்களை தேடி மழையில் சோலைக்காடுகளுக்குள் பயணம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மழை காடுகளில் மழை அதிகமாக பெய்யும் மாதங்களில் தான் அரிய வகை ...
Read Moreமெரிட் தீவு - பறவைகளுடன் ஒரு நாள் ப்ளோரிடா மாகாணம் என்றவுடனே பலருக்கும் நினைவுக்கு வருவது டிஸ்னி லேண்ட் அல்லது கடற்கரை. ஆனால் இயற்கை பிரியர்களான எங்களுக்கு ...
Read Moreடெத் வேலி தேசிய பூங்கா - ஒரு அழகிய பாலைவனம் டெத் வேலி அமெரிக்காவிலேயே உள்ள பெரிய தேசிய பூங்கா. 3,373,063 ஏக்கர் பரப்பளவில் உள்ள டெத் ...
Read Moreகம்போடியா - ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும் கம்போடியா என்றவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆங்கோர் வாட். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட இந்த ...
Read Moreதேரிக்காடு - தமிழகத்தின் பாலைவனம் நானும் வினோத்தும் என்ன இல்லை நம் இந்தியாவில் என்று எப்பொழுதும் பெருமையாக கூறுவோம். மழை காடுகள்,பாலைவனம், பனி மலைகள் என்று விதவிதமான ...
Read Moreஎவெர்க்லேட்ஸ் - அலிகேட்டரும் ஆர்க்கிட் மலர்களும் ! என்னடா இது சுத்தமாக சம்பந்தமே இல்லாத இரண்டு இனங்களை இணைத்து தலைப்பு இருக்கிறதே என்று குழப்பமாக இருக்கிறதா ? ...
Read Moreவசந்த கால மலர்கள் தேடி ஒரு பயணம் தென்னிந்தியாவில் மழைக்காலமும் வெயில்காலமும் தான் நாம் பெரும்பாலும் அனுபவிக்கின்ற சீதாக்ஷண நிலைகள். மார்கழி மாத குளிருக்கே நாமெல்லாம் தலையில் ...
Read Moreஇரவிக்குளம் (Eravikulam) பூங்காவில் 2017-ஆம் ஆண்டிலிருந்தே 2018-ஆம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் மலரப்போகிறதென்று ஒரே தடபுடல். நாங்களும் ஜூலை மாதத்திலிருந்து பூங்காவிற்கு போன் செய்து குறிஞ்சி மலர்ந்து ...
Read Moreபழனி மலையில்(Palani Hills) குறிஞ்சி மலர்கள் நீலகிரி மலை தொடர்ச்சியில் குறிஞ்சி மலர்களை பார்த்த பின் பழனி மலை(Palani Hills) தொடர்ச்சியையும் ஒரு பார்வை பார்த்து விடலாம் ...
Read More